Share via:

அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், உடன்பிறப்புகள், நாம் தமிழர்
தம்பிகள் ஆகியோருடன் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு
வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகர், ‘விஜய் வெளியே வந்தால் முட்டை அடிப்போம்’
என்று கூறியதை அடுத்து உடனடியாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை
அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதம் தாங்கிய 8 -11 சிபிஆர்எஃப்
வீரர்கள், காவல்துறை படையினர் ,தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.
இந்த பாதுகாப்பு கொடுத்ததால் மத்திய அரசுக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து நன்றி தெரிவித்து
வருகிறார்கள். அதோடு, விஜய்க்கு ஒய் பிரிவி போதாது, அதை விட அதிக பாதுகாப்பு தரும்
இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
இந்த விவகாரம் நாம் தமிழர் கட்சியினரை ஆவேசத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தினமும் மக்களை நேரில் சந்தித்து வரும் அண்ணன் சீமானுக்குப் பாதுகாப்பு தராமல் பனையூர்
பங்களாவில் உட்கார்ந்து ஆலோசனை செய்யும் விஜய்க்கு எதுக்குப் பாதுகாப்பு..? சீமானைப்
பார்த்தால் கோமாளியாகத் தெரிகிறதா என்று ஆவேசப்படுகிறார்கள்.
விஜய்க்கு இப்படி திடீர் பாதுகாப்பு கொடுத்ததை அடுத்து அவர் ஆர்.எஸ்.எஸ்.
ஆள் என்பது உறுதியாகிவிட்டது என்று உடன்பிறப்புகள் வன்மம் கக்குகிறார்கள். ‘இப்படித்தான்
அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு தந்தவுடன் பாதுகாப்பு கொடுத்து பந்தா செய்தார்கள்.
ஒய் பிரிவு பாதுகாப்புடன் வலம் வருவதன் மூலம் முக்கியமான அரசியல் தலைவர்னு இமேஜ் பில்டப்
செய்வது ஒரு பக்கம் என்றால், விஜய் நடவடிக்கையை மத்திய அரசு கண்காணிப்பதற்காகவும் இந்த
ஏற்பாடு. இதுவரை ஆர்.எஸ்.எஸ். ஆளாக சீமானை வைத்திருந்தார்கள். புதிய நபர் வந்தவுடன்
சீமானை உதறிவிட்டார்கள். விரைவில் அவரைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்போதுதான்
ஓட்டு சிந்தாமல் சிதறாமல் விஜய்க்குக் கிடைக்கும் என்று திட்டம் போடுகிறது’’ என்று
ஆருடம் சொல்கிறார்கள்.
இதுவரை வீட்டைவிட்டு வெளியே வராத விஜய்க்குப் பாதுகாப்பு என்பது
பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்புகிறது. ஏற்கெனவே நிறைய பவுன்சர்கள் இருப்பதால், இந்த
பாதுகாப்பை விஜய் மறுக்க வேண்டும் என்றும் அவரது கட்சியினர் கோரிக்கை வைக்கிறார்கள்.
தேர்தல் அரசியல் வேகம் எடுக்கிறது.