Share via:
மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும்
ஏற்க மறுப்பது ஏன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்வியால் தமிழகம்
முழுக்க பற்றி எரிகிறது. தேசிய கல்விக்கொள்கை என்ற பேரில் இந்தியை திணிக்க பல வழிகளிலும்
முட்டுக்கட்டை போடுவதுடன் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 2000 கோடியை கொடுக்காத பா.ஜ.க.
அரசுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “They have to come to
the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக்
கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு
மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால்
ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு
ஏகபோக எஜமானர்கள் அல்ல! “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி
கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால்,
தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…’’ என்று பொங்கியிருக்கிறார்.
நடிகர் விஜய் கூட, ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும்
அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக
வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என்று கூறியிருக்கிறார். அமைச்சர்
அன்பில் மகேஸ், மீண்டும் ஒரு இந்திப் போராட்டத்துக்குத் தமிழகம் தயாராகிறது என்று ஆவேசம்
காட்டுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து இந்தி திணிப்பிற்கு எதிராக
போராடி வருகிற தமிழ்நாடு, இருமொழிக் கொள்கையை பற்றிக் கொண்டு கல்விபுலத்திலும், தொழிற்துறையிலும்
அடைந்துள்ள முன்னேற்றத்தின் அனுபவத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், தமிழ்நாட்டு
மாணவர்களின் நலனை பொருட்படுத்தாமல், இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர
பிரதான் “கட்டாயமாக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழி கொள்கையை ஒத்துக்
கொண்டுதான் ஆக வேண்டும்.” என்று கொடுத்துள்ள இந்த பேட்டி மாநில உரிமைகளை நிராகரித்து,
இந்தி திணிப்பை ஆதரிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இனிமே மொரட்டு சம்பவம்தான்.