Share via:
தன்னுடைய கட்சியில் இலையுதிர் காலம் என்று சீமானே ஒப்புக்கொள்ளும்
அளவுக்கு அவரது கட்சி நிலவரம் இருந்துவருகிறது. நீண்ட காலமாக அமைதி காத்துவந்த காளியம்மாள்
கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்
பாவேந்தன் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இந்நிலையில் காளியம்மாளை கன்னாபின்னாவென்று
விமர்சனம் செய்துவருகிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். இந்நிலையில் சீமான் வீட்டுக்குப்
பெட்ரோல் குண்டு போட முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள் பற்றி நாம்
தமிழர்கள் தம்பிகள் கடுமையாக அட்டாக் செய்து வருகிறார்கள். நாம் தமிழர்கள், ‘’அண்ணன்
கூறிய அந்த ஒரு வார்த்தையையே உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றால் நீங்கள் எல்லாம்
எப்படி தமிழ் தேசியத்தின் களப்போராளியாக ஆனீர்கள் ஈழத்தில் தளபதி ஜெயம் அவர்களுக்கு
10 விரல் நகங்களும் பிடுங்கப்பட்ட போதும் தலைவருக்காகவே போராடி உயிர் நீற்பேன் என்று
கூறி உயிர்விட்டவர் எங்கே… காளியம்மாள் ஒரு துரோகி’’ என்கிறார்கள்.
மேலும், ‘’பிரபாகரன் வாழ்க என்று சொன்ன வாய் இனி தளபதி வாழ்கனு
சொல்லணும் திமுக உங்களை கட்சியை விட்டு கழட்ட எப்படி திட்டம் போட்டான்களோ அதுக்கு சரியா
பலியாகிட்டீங்க. உங்க அரசியல் வாழ்வு முடிஞ்சாலும், இனி பண வாழ்வு இருக்கு. So No
worry. தமிழ்நாட்டின் தமிழச்சி No.2. இன்பநிதிக்கு டயபர் மாத்துங்க’’ என்கிறார்கள்.
அதேபோல், ‘’எல்லா கட்சியிலும் உட்கட்சி பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்
அப்படி இல்லாமல் எந்த ஒரு நிர்வாகமும் இயங்க இயலாது.. ஒரு சாதாரண சமூகவியல் செயல்பாட்டராக
இருந்த உங்களை தமிழகம் முழுக்க அறியும் முகமாக கொண்டுபோய் சேர்த்தவர் சீமான். அவரையே
மேடையில் அசிங்கம் செய்ய முயன்றீர்கள். அத்தனை நிர்வாகிகளும் விட்டு போனாலும் அண்ணனை
எந்த நாயாலும் வீழ்த்த முடியாது.. களைகள் உதிரட்டும்.. புதிய இலைகள் துளிரட்டும் பட்டுப்போன
மரம் அல்ல.. குறைத்து மதிப்பிடாதீர்கள்!’’ என்று கண்டிக்கிறார்கள். கட்சி மாறிய காளியம்மாளுக்கு
தொடர்ந்து மிரட்டல்கள் வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லாமல் காளியம்மாள்
அமைதி காத்துவருகிறார்.
அதேநேரம் காளியம்மாள் ஆதரவாளர்கள், ‘’பிசிறு என்று கூறியபோதே தன்மானத்துடன்
வெளியே வந்திருக்கலாம். சீமான் கழுத்தப் பிடிச்சு வெளியில் தள்ளுவதற்கு முன்பே வந்திருந்தால்
மரியாதையோடு வந்திருக்கலாம்.. மதியாதார் தலைவாசல் மிதியாதே.. சுய சிந்தனை கொண்ட யாரும்
சீமானோடு நீடிப்பது கடினம் தான்.. நான் தான் எல்லாமே என்று ஆணவத்தோடு இருக்கும் சீமானிடம்
பயனிப்பது கடினம்.. வாழ்த்துக்கள்’’ என்று பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் பெரியார் விவகாரத்தில் சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு
வீசி தாக்க திட்டம் போட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த 10 பேர் போலீசாரால்
கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தீயாகப் பரவி வருகிறது.