News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்றாலும், இதனை முன்னின்று தமிழக பாஜகவே நடத்தியது. ஒரு நாள் மாநாடு என்றாலும் எழு நாட்கள் விழாவைக் கொண்டாடி மதுரையை அசரடித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நயினார் நாகேந்திரம் மிகப்பெரிய ஸ்கோர் செய்திருப்பது அண்ணாமலை டீமை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

அண்ணாமலை வந்தால் மட்டுமே கூட்டம் கூடும், நயினாருக்கு மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லை என்று அண்ணாமலை டீம் தொடர்ந்து கடும் கண்டனம் எழுப்பிவந்தார்கள். ஆனாலும் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து எதுவும் பேசவே இல்லை.

இந்த நிலையில் மதுரையில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட மாபெரும் முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் மற்றும் பல தலைவர்கள், லட்சக்கணக்கான முருக பக்தர்கள்,  ஆதீனங்கள், சமய குருக்கள்,  பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொண்டு மதுரையை கோலாகலமாக்கியுள்ளார்கள்.

இது குறித்து பேசும் நயினார் ஆதரவாளர்கள், ’’முருகன் மாநாடு நடத்தியது இந்து முன்னணி என்றாலும் கூட அதை மாபெரும் மாநாடாக வெற்றி பெற முழுவதுமாக பின்புலமாக இயக்கியது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான டீம். நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நடத்திய முதல் மாநாட்டை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி காண்பித்து தான் ஒரு களப்பணியாளர் என்பதை நிரூபித்து காண்பித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து மாவட்டம்தோறும் பாஜக நிர்வாகிகளை நியமிப்பது முதல் கட்சி சீனியர் தலைவர்களை குரூப் பாலிடிக்ஸ் செய்யாமல் ஒருங்கிணைத்து செயல்படுவது வரை தன்னை மட்டும் விளம்பரம் செய்து முன்னிலைபடுத்தாமல், ஒட்டுமொத்த பாஜக கட்சியையும் முன்னிலைப்படுத்தி ஒரு கட்சியின் தலைவராக கட்சியை வழிநடத்துவது மட்டுமல்ல தேவை இல்லாத சர்ச்சை பேச்சுக்களை பேசி மீடியாவுக்கு தீனி போடாமல் உண்மையாக கூட்டணி கட்சிகளை அரவணைத்து அதிமுகபாஜக கூட்டணி வெற்றி பெற உழைக்கிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் வெறும் வாய் சவடால் அல்ல செயல் வீரர் என நிரூபித்துள்ளார்’’ என்று நேரடியாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்க்காத அண்ணாமலை டீம் அதிர்ந்து நிற்கிறது. இனி, அண்ணாமலை பாணி அரசியலுக்கு தமிழகத்தில் வேலை இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதோடு அதிமுக தலைவர்களும் இந்த மாநாட்டுக்கு வரவழைத்தது நயினாரின் அரசியல் நாகரிகம் என்பதால் மேலிடமும் செம ஹேப்பி என்கிறார்கள். ஆக, அண்ணாமலைக்கு அம்புட்டுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link