Share via:
காமராஜர் காலத்துக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ்
கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக தோள் மீது ஏறி பயணிப்பது வழக்கம்.
இப்போது முதன்முறையாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று உரிமைக்குரல்
எழுப்பியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று ஸ்டாலினிடம் இதுவரை
நேரில் கேட்டதில்லை. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ்
சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ்
கட்சியின் முன்னாள் எம்பியுமான கே எஸ் அழகிரி தற்போது ஆட்சியில் பங்கு காங்கிரசுக்கு
வேண்டும் என்கிற முழக்கத்தை முன் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி
பேரத்தில் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கே எஸ் அழகிரி மூலமாக காங்கிரஸ்
மேலிடம் இந்த முன்னெடுப்பை துவக்கியுள்ளதாக கூறுகிறார்கள்
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட
காங்கிரஸ் 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டது கடந்த 2021 சட்டமன்றத்
தேர்தலில் காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 25 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன
இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம்
என்றும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்போம் என்றும் கே.எஸ் அழகிரி பேசியிருக்கிறார்
கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல கூட்டணி வாய்ப்பு
இல்லாத காரணத்தினால் திமுக கொடுத்த குறைந்த இடங்களை பெற்றுக் கொண்டது. 2026 சட்டமன்ற
தேர்தலை பொருத்தவரை திமுக அதிமுக கூட்டணிக்கு மாற்றாக தவெக தலைவர் விஜய் தலைமையில்
ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது
தவெக தரப்பிலிருந்து கூட்டணி குறித்து காங்கிரஸ் மேல் இடத்திடம்
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
முக்கிய தலைவர்களில் ஒருவரான கேஎஸ் அழகிரி ஆட்சியில் பங்கு என்கின்ற குண்டை தூக்கி
திமுகவை நோக்கி வீசியுள்ளார்
காங்கிரசின் கோரிக்கையை ஏற்று அதிக இடங்களை திமுக கொடுப்பதற்கு
வாய்ப்பு இருக்கிறதா? மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது திமுகவின்
நிலைப்பாடு என்கிற நிலையில் காங்கிரஸ் கேட்கும், கூட்டணி ஆட்சிக்கு திமுக ஒப்புக் கொள்ளுமா?
என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது விஜய் என்று
ஒரு ஆப்ஷன் இருப்பதாலே இப்படி குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். குழப்பம் வருமா..?