Share via:
நூறு நாள் வேலை திட்டத்தில்
சோம்பேறிகள் தான் இருக்கின்றனர். எல்லோரும் தண்டத்துக்கு சம்பளம் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால்தான் விவசாயமே அழிந்து போனது என்று கடுமையாக விமர்சனம்
செய்துவருபவர் சீமான். இந்த நிலையில் அவரது தாய் அன்னம்மாள் நூறு நாள் வேலைத் திட்டத்தில்
பங்கேற்கச் சென்றது சர்ச்சையானது.
நூறு நாள் வேலை திட்டம்
கேட்டு மனு கொடுக்க வந்த சீமான் அம்மா அன்னம்மாள் ஒரு பொலிரோ காரில் ஏறி செல்லும் காட்சிகளை
வெளியிட்ட தி.மு.க.வினர், ‘’பொலிரோ காரில் வந்து நூறு நாள் திட்டத்தில் வேலை கேட்கும்
அளவுக்கு ஏழையாக இருக்கிறார் சீமானின் அம்மா’’ என்று கிண்டல் செய்தார்கள். தி.மு.க.வினர்
இந்த விவகாரத்தை பெரிதாக்கினார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த
சீமானிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘’யாராவது கூப்பிட்டிருப்பார்கள். அதனால் போயிருப்பார்’
என்று அசட்டையாக அந்த விவகாரத்தைக் கடந்து செல்கிறார். அதோடு எங்கள் தோட்டத்திற்கு
வேலை செய்ய யாருமே வருவதில்லை என்று சொல்கிறார்.
இதையும் தி.மு.க.வினர்
ஆதாரத்துடன் எடுத்துப் போட்டு அம்பலப்படுத்துகிறார். அதாவது, ’’100 நாள் வேலை திட்டத்தால்
சீமானுக்குப் பாதிப்பாம் இவங்க அம்மா சும்மா போய் நின்னாங்களாம் சீமான் அம்மா வந்தா
தான் எதாவது நடக்கும் என்பதால் போனாங்களாம், ஆனா பாருங்க இவங்க அம்மா அன்னம்மாள்
100 நாள் வேலை திட்டத்தில் 2021 வரைக்கும் வேலை செய்து சம்பளம் வாங்கி இருக்காங்க ஆனால்
இதை எல்லாம் மறைத்து கூசாமல் பொய் சொல்லலாமா..?’’ என்று ஆதாரம் காட்டுகிறார்கள்.
சீமானுக்கு இதெல்லாம்
சாதாரணமப்பா.