Share via:
மாப்பிள்ளைக்கு சர்வ
சுதந்திரம் கொடுத்திருக்கும் தி.மு.க. ஆட்சியைப் போன்று பா.ம.க.விலும் மாப்பிள்ளைக்கு
அதிகாரம் கொடுக்க முயன்ற டாக்டர் ராமதாஸின் முயற்சிக்கு சொந்த மகனே கடும் எதிர்ப்பு
தெரிவித்ததால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் நிர்வாகிகள் தலை சுற்றிக் கிடக்கிறார்கள்.
புதுச்சேரியில்
நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவராக
முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர்
ராமதாஸ். அதாவது ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன்
கட்சியில் இருந்து விலகியதால் காலியான அந்த பதவிக்கு முகுந்தனை அறிவித்தார் டாக்டார்
ராமதாஸ்.
யார் இந்த முகுந்தன்..?
டாக்டர் ராமதாஸின்
மகளான ஸ்ரீகாந்தி எனும் காந்திமதிக்கு முகுந்தன் மற்றும் ப்ரீத்திவன்
என இரண்டு பிள்ளைகள். இதில் தமது மூத்த மகள்
சம்யுக்தாவிற்கு அக்கா மகன் ப்ரீத்திவனுக்கு
திருமணம் செய்து வைத்தார் அன்புமணி.
ஆகவே, குடும்பத்தில் அதிகாரமிக்க நபராக ப்ரீத்திவன்
கை ஓங்கியது
இதனை கண்டு மனம் உடைந்த
முகுந்தன் தாத்தா
ராமதாஸ்க்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே
இந்த பதவியைக் கொடுத்தார். இன்னொரு வகைஇல் ப்ரீத்திவனின் செயல்பாடுகளில் டாக்டர் ராமதாஸுக்கு
திருப்தி இல்லை என்பதாலே முகுந்தனை இந்த பொறுப்புக்குக் கொண்டுவந்தார்.
இப்படி மேடையில்
வைத்து அறிவிப்பார் என்பதை எதிர்பார்க்காத அன்புமணி, மேடையிலேயே சொந்த அப்பா, கட்சியின்
நிறுவனர் என்றெல்லாம் பார்க்காமல் தன்னுடைய எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்தார்.
இதை எதிர்பார்க்காத ராமதாஸும், ’’இந்த கட்சியை
உருவாக்கியது தான்தான். நான் சொல்வதை தான் அனைவரும்
கேட்க வேண்டும். தனது கருத்தை
கேட்க முடியாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம்’’ என்றும் அதிரடி கிளப்பினர்.
இதையடுத்து அன்புமணி,
‘’சென்னை உள்ள பனையூரில் தனியாக
கட்சி அலுவலகம் திறந்து இருப்பதாகவும்
அங்கு வந்து தொண்டர்கள் தன்னை
சந்திக்கலாம்…’’ என்றும் கூறிவிட்டுக்
கிளம்பினார். ஒரு கும்பல் அன்புமணிக்கு வாழ்க கோஷம் போட்டார்கள். ஒரு கும்பல் ராமதாஸ்க்குக்
குரல் கொடுத்தது. அதேநேரம், யாருடைய கை ஓங்கும் என்று புரியாமல் நிர்வாகிகள் விழிக்கிறார்கள்.
ராமதாஸ்க்கு வயதாகிவிட்டது
என்றாலும் இந்த தேர்தலில் அவரது ஆதிக்கம் இருக்கும் என்பதால் அவரை எதிர்க்கவும் முடியாமல்,
அன்புமணியை ஆதரிக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் இன்று தைலாபுரத்தில்
ஆஜராகும் அன்புமணி நேருக்கு நேராக ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறாராம்.
அடிதடி நடந்துடாம
போலீஸ் பாதுகாப்பு குடுங்க சாரே.