Share via:
தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி திருச்சி எஸ்.பி.யாக இருந்த வருண்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி.யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.யாகவும், ஏ.டி.ஜி.பி.வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தலைமையிட ஏ.டி.ஜி.பி. வினித்தேவ் வாங்கடேவுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணைய ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் தற்போது கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ்குமார் தற்போது காவல்துறை தலைமையக இணை ஆணையராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக பதவிவகித்து வந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்போது கிழக்கு இணை ஆணையராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமிழகத்தில் ஒரேநாளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி உயர்வு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.