Share via:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் தறிகெட்டுக் கிடக்கும் நிலையில், ஒரு சாதாரண பாட்டியைத் தேடி ஸ்டாலினின் போலீஸ் அலைவது தமிழகத்துக்கே பெரும் அவமானமாகப் பார்க்கப்படுகிறது.
மெட்ரோ தூணில் ஸ்டாலின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை பார்க்கும் ஒரு பாட்டி கடுமையான கோபத்துடன் செருப்பை எடுத்து அடித்து எறிவதும், மண் அள்ளி தூற்றியதும் ஒரு வீடியோவாக வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ குறித்து நாம் தமிழர் சீமான், ‘’திமுக அரசு விற்ற சாராயத்தால் அவருடைய கணவரோ அல்லது மகனோ பலியாகி இருக்கலாம் அந்த கோபத்தில் அந்த பாட்டி இதை செய்திருக்கலாம் என்ன என்று விசாரிக்காமல் போஸ்டர் மீது செருப்பு வீசிய பாட்டியை, வீடியோ எடுத்த சிறுவனையும் கைது செய்ய துடிக்கிறது திமுக அரசு.’’ என்று கண்டனம் செய்தார்.
இந்த விஷயத்தில் பாட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரபாகரராஜா எம்.எல்.ஏ. கே.கே.நகர் போலீஸ் ஸ்ஷேனில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில் போஸ்டர் மீது செருப்பு வீசும் பாட்டியையும் அதை வீடியோ எடுத்து பரப்பியவரையும் தேடியது. சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவியை ஆய்வு செய்ததில் வீடியோ எடுத்த பிரதீஸ் என்பவர் கன்னியாகுமரிக்குப் போய்விட்டது தெரியவந்தது. ஆனாலும், அவரை விரட்டிப் பிடித்து கைது செய்திருக்கிறார். இதையடுத்து பாட்டி யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.
சென்னை பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்த வேண்டிய போலீஸார்களை ஒரு பாட்டியைத் தேடுவதற்கு அனுப்புவது நியாயமா ஸ்டாலின் என்று சமூக ஆர்வலர்கள் கோபம் காட்டுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பாட்டிக்கு இப்படியொரு பரிதாபமா..?