News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று கனிமொழியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டாமாக
கொண்டாடி வருகிறார்கள். கருணாநிதி, அண்ணா சமாதிகளில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு தனது
ஆதரவாளர்களை சந்தித்துள்ளார். தலைவி வா, தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு! 
என்று கருணாநிதி மக்கள்கூட்டத்துடன் கனிமொழியை சட்டசபைக்கு அழைக்கும் போஸ்டர்கள் கட்சிக்குள் பெரும் தீயை மூட்டியுள்ளது.  

உதயநிதியின் புகைப்படம் இல்லாமலே கனிமொழி ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த போஸ்டர் மற்றும் வாழ்த்து ஆகியவற்றைப் பார்க்கும்போது கனிமொழி ஆதரவாளர்களுக்கு உதயநிதி மீது கடும் கோபம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கனிமொழியின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கும் வாழ்த்துக்களில்,
பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய நான்கு திறமைகளின் சங்கமம் என்று வாழ்த்துகிறார்கள்.
மென்மையான பேச்சு, இலக்கிய ஆற்றல், பத்திரிகை அனுபவம், அரசியல் புத்திசாலித்தனம், சமூக
காரணங்களுக்காக வாதிடுதல், பல்வேறு குழுக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் திறன்,
கலாச்சார பங்களிப்புகள் ஆகியவைகளை ஒருசேர பெற்ற ஒரு பிரம்மிப்பூட்டும் ஆளுமை.

தூத்துக்குடியில், குறிப்பாக டிசம்பர் 2023 இல் ஏற்பட்ட வெள்ளத்தின்
போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும், மருத்துவ உதவி, அடிப்படைத்
தேவைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவைகளில் கனிமொழி அவர்களின்
விரைவான நடவடிக்கைகள் மற்றும் அயராத முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

ஆண்டுதோறும் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க பொங்கல் பண்டிகையின்
போது நடைபெறும் திறந்தவெளி தமிழ் கலாச்சார விழாவான சென்னை சங்கமத்தை 2007 ஆம் ஆண்டு
உருவாக்கி இன்று வரை தொடர்ந்து நடத்திக்கொண்டுள்ளார். வரலாற்று ரீதியாக தமிழ்நாட்டில்
ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சமூக-அரசியல் நிலப்பரப்பில் அவருக்கென்று ஒரு தனித்துவமான
அடையாளத்தை நிறுவ அவருடைய இந்த தலைமை பண்புகளே காரணம்…’’ என்று பாராட்டி வருகிறார்கள்.

 என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link