Share via:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்த நேரத்தில் அவரது அரசியல்
ஆலோசகராக அர்ஜுனமூர்த்தியை பா.ஜ.க. களம் இறக்கியது. அதேபோன்று இப்போது நடிகர் விஜய்க்கு
ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜை பா.ஜ.க. களம் இறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இது குறித்து திருச்சி சூர்யா, ‘’*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய் அவர்களின் ஆலோசகர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம்
அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை
என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு
வேலை செய்கிறார் என்பது தெரியும்.
அறியாத ஒரு செய்தி இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது
மத்திய அரசு பணியில் வருமானவரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ்.
ஆகும். மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது
மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தை எடுக்க வைத்தது
இந்த அருண்ராஜ் என்ற அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பணி செய்வது
மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகி தான் ஜான் ஆரோக்கியசாமி
தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசராக நியமிக்கப்பட்டு சுமார் 11 கோடி ரூபாய் வரை வாங்கி
இருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் களத்திற்கு வராமல் பனையூர்
அரசியல் செய்வதற்கு மிக முக்கியமான காரணமானவர்கள் இந்த இருவர்தான் என்று தவெக நிர்வாகிகளே
புலம்புகின்றனர்.’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மத்திய பா.ஜ.க. அரசின் உத்தரவின் பேரிலே அருண்ராஜ் தவெகவிற்கு
வேலை செய்கிறார். பா.ஜ.க. ஆதரவு தெரியக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசை எதிர்ப்பது
போன்றும் சீன் போடுகிறார் என்கிறார்கள். உண்மை வெளியே வரட்டும்.