Share via:
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு
நீதி வேண்டும் என்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள்,
‘யார் அந்த சார்..?’ என்ற பேட்ஜ் சட்டையில் அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்தார்கள்.
யார் அந்த சார் என்ற எடப்பாடியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கும் என்பதாலே, அதை திசை திருப்பவே
கவர்னர் சட்டசபையைப் புறக்கணித்து தி.மு.க.வுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த காயத்ரி ஜெயராம், ‘’மீண்டும் திமுகவுக்கு
உதவும் முயற்சியில் ஆளுநர். பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறீர்களா? யார் அந்த
சார் பேட்ஜ் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களால் சட்டமன்றத்தில் வலுவான
குரல் எழுப்பப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அ.தி.மு.க.வினர், ‘’பாஜக
ஒரு நச்சுப்பாம்பு தமிழ் நாட்டில் திமுகவைவிட மிக மோசமான கட்சி எதுவென்றால் அது பாஜக
தான் ஆகவே தமிழ் நாட்டில் பாஜக திமுக கள்ளக்கூட்டணியை ஒழிப்பதே தமிழக மக்களுக்கு நலம்பயக்கும்’’
என்று முழங்கி வருகிறார்கள்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்தால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட
எதிர்க்கட்சிகளின் பேட்ஜ்களைக் காட்ட வேண்டியிருக்கும் என்பதாலே இன்று நேரலை முழுமையாக
நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பு பட்டை அணிவிக்கும்
போராட்டம் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பாக அறிவிக்கப்பட்டது. அந்த போராட்டத்துக்கும்
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்டாலின் பயந்துட்டீங்களா என்று அ.தி.மு.க.வினர் தொடர்
கேள்வி எழுப்பிவருகிறார்கள்.