News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

கேரள  மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் முடித்த நிமிஷா பிரியாவுக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற நிமிஷா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்போது தனியாக மருந்தகம் வைக்க வேண்டும் என்று நிமிஷாவுக்கு எண்ணம் எழுந்த நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மஹிதி என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரை பல ஆண்டுகளாக கொடுமைப்பபடுத்தியுள்ளார். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நினைத்த நிமிஷா, மஹதி குறித்து ஏமன் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை போலீஸ் ஏற்க மறுத்ததுடன், நிமிஷாவை கைது செய்து 6 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிமிஷா, மஹதியிடம் இருந்து தப்பிக்க 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மருந்து ஓவர்டோஸ் ஆனதால், மஹிதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நிமிஷா கைது செய்யப்பட்டு அவருக்கு 2018ம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமாக வெடித்த நிலையில் நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு சுமார் 6 ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் நிமிஷாவும் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு கோரி அந்நாட்டு அதிபருக்கும் நிமிஷா கோரிக்கை வைத்திருந்தார். துரதிருஷ்டவசமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் நாடு தற்போது உறுதி செய்துள்ளது. எனவே வருகிற அடுத்த மாதம் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து மீட்போம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து பேசும்போது, ஏமனில் நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அவரை மீட்க மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link