News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா எதிர்பார்த்தபடியே அரசியல் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் வைத்திருப்பது திருமாவுக்கு நல்லது இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே நேரம் அவராகவே கட்சியை விட்டு வெளியேற்றடும் என்ற முடிவில் திருமா இருக்கிறார்.

இந்த புத்தக விழா என்பது பட்டியலின வாக்குகளை குறிவைத்து நகர்த்தப்பட்ட விழாவாகவே இருக்கிறது. ஆகவே, இப்போது அம்பேத்கர் இயக்கம் ஒன்று புதிதாகத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் ஆதவ். அம்பேத்கர் இயக்கத்துக்கு தமிழகம் முழுக்க ஆட்கள் சேகரித்து, அந்த நபர்களுடன் விஜய் கட்சியில் இணையப் போகிறாராம்.

இப்போது பட்டியலின் வாக்குகள் அதிமுக விடமே அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வாக்குகளை பெறுவதற்கான தலைவராக ஆதவ் உருவாகிறார் என்று ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அம்பேத்கரை உயர்த்திப் பிடித்தாலே பட்டியலின மக்கள் நம்பி வாக்குகள் அளிப்பார்கள் என்று நினைக்கிறார் ஆதவ் அர்ஜூனா.

அதற்காகவே இந்த நிகழ்வுகள் எல்லாமே நடக்கிறது என்கிறார்கள். ஜனவரி மாதம் விஜய் கட்சியில் இணையப்போகும் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பொதுச்செயலாளர் பதவி என்று பேச்சுவார்த்தை நடக்கிறது இப்படியொரு நபர் தனக்குத் தேவை என்று கருதும் விஜய் இந்த உடன்பாட்டுக்குத் தயாராகவே இருக்கிறார். ஆக, இப்போதைக்கு புத்தக விழாவால் அதிகம் பாதிக்கப்பட இருக்கும் நபர் புஸ்ஸி ஆன்ந்த் மட்டும்தான்.

விஜய்யைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டு வெள்ளந்தியாக சிரித்துக்கொண்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த், இனி நம்பர் 3 என்ற இடத்துக்குப் போகிறார் என்பது வருத்தமான செய்தி தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link