Share via:
வட தமிழகத்தைப் புரட்டியெடுத்த
ஃபென்சல் புயல் தாக்கம் இன்னமும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இன்னமும் பல இடங்களில்
தண்ணீர் வடியவில்லை. திருவண்ணாமலை நிலச்சரிவில் செத்துப்போன குடும்பத்தினரின் கதறல்
ஓயவில்லை. ஆனால், அப்படியொரு விஷயமே தமிழகத்தில் நடந்தது தெரியாமல் ரஜினிகாந்த் இருக்கிறார்
என்பது அதிர்ச்சியான தகவல்.
சென்னை விமான நிலையத்தில்
இருந்து கூலி படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்கிற்கு ஜெயப்பூர் செல்வதற்கு வந்தார் ரஜினிகாந்த்.
அப்போது அவரிடம் ஃபென்சல் புயல் குறித்தும் திருவண்ணாமலை நிலச்சரிவு மரணம் குறித்தும்
கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அப்படியா..? ஓ மை காட், ஸாரி’’ என்று சாதாரணமாக
கடந்து சென்றுவிட்டார்.
தமிழகத்தின் சிஸ்டம்
சரியில்லை, அதையெல்லாம் மாற்றப் போகிறேன் என்றெல்லாம் வீர வசனம் பேசிய ஒருவர் தமிழகத்தின்
சோகத்தைக் கூட அறியாமல் இருப்பது பெரும் துயரம் என்று அவரது ரசிகர்களே வருத்தப்படுகிறார்கள்.
ஒருசில ரசிகர்கள், ‘’தலைவர் இப்போது குடிப்பது கிடையாது. ஆனால், பயணம் என்பதால் கொஞ்சம்
குடித்துவிட்டு வந்து போதையில் இருந்திருக்கலாம். அதனால் தான் இப்படி பேசுகிறார்’’
என்று சமாளிக்கிறார்கள்.
அதேநேரம் ரஜினிகாந்த்
ஆதரவாளர்கள், ‘’அவர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. அவர் இப்போது சினிமா நடிகர் மட்டும்
தான். எனவே, அவரிடம் சினிமா பற்றி மட்டும் கேளுங்கள், மற்ற விஷயங்கள் எதுக்கு?’’ என்று
கடுப்பாகிறார்கள்.
நல்லா இருக்குது
சார் உங்க செட்டிங்.