Share via:
vலண்டனில் இருந்து அண்ணாமலை திரும்பிவந்ததும் படுவேகமாக அரசியல் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை என்னவோ அடக்கியே வாசிக்கிறார். அதேநேரம், தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இதை தி.மு.க.வினரே கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமான திருப்பம்.
அண்ணாமலை தமிழக பா.ஜ.க.
தலைவராக வந்ததுமே தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிட்டார்.
முதல் முறை அவர் வெளியிட்ட ஃபைல் பெரும் பரபரப்பானது. அதையொட்டி மீண்டும் ஒரு ஃபைல்
வெளியிட்டார்.
அந்த நேரத்தில் அ.தி.முக.
குறித்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிடப்படும் என்ற அறிவிப்புதான் கூட்டணி உடைவதற்குக் காரணமானது.
ஆனால், அவர் அ.தி.மு.க. ஃபைல்ஸ் எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தேர்தல் ஸ்பெஷலாக
தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு தி.மு.க.வினரே,
‘’ஏற்கெனவே இரண்டு ஃபைல்ஸ் விட்டு குப்பைத் தொட்டிக்குப் போயாச்சு. இப்போது மூணாவது
ஒண்ணா.. சீக்கிரமா விடுங்கண்ணா… பொழுதுபோகவில்லை’’ என்று கிண்டல் செய்கிறார்கள். இந்த
நிலையில் அதானி பற்றிய கேள்விக்கும் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
அதாவது, ’விடுதலை
சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது ஆதவ் அர்ஜூனா கையில்
இருக்கிறதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு திருமாவளவன், ‘’பா.ஜக.
அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடியின் கையில் இருக்கிறதா?’’ என்று
பதில் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு அண்ணாமலை,
‘’இந்தியாவை ஆளும் மிகப்பெரும் கட்சியான பா.ஜ.க. குறித்து திருமாவளவன் இப்படியெல்லாம்
கேள்வி எழுப்பக்கூடாது’’ என்று நைசாக நழுவிவிட்டார். இப்படி எஸ்கேப் ஆனால் எப்படி அண்ணாமலை..?