Share via:
ஒரு காலத்தில் அண்ணாமலை ஆர்மியில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர்
திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு எல்லா கட்சியினருடனும் சண்டைக்குப்
போய்க்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொஞ்ச
நாட்கள் அமைதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதாகத் தெரியவில்லை
என்றதும், அவருடனே மோதத் தொடங்கிவிட்டார்.
சமீபத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று அண்ணாமலை
அறிவித்திருந்தார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடலாமே எதற்காக தேர்தல் வரை வெயிட்
செய்ய வேண்டும் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் திருச்சி சூர்யா, ‘’சட்டமன்ற தேர்தல் நெருங்கும்
நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும் (இதில் நானே என் தனிப்பட்ட முயற்சியில்
சேகரித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன்) ஊழலை ஒழிப்பேன் என்ற பெயரில், ஊழல்
பேர்வழிகளிடம் மிரட்டி பணம் பறித்து சொத்து சேர்த்த விவரங்கள் மற்றும் அண்ணாமலையை அண்டி
பிழைத்து சமீபத்தில் பணக்காரர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கட்சி
பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவரங்கள் இந்த ஃபைல்சில் கண்டிப்பாக
இடம்பெறும்…’’ என்று கூறியிருப்பது அண்ணாமலை எதிர்ப்பாளர்களை குஷியாக்கியுள்ளது.
ஆடியோ, வீடியோ என்று அவரது கட்சிக்குள் இருந்த எதிர் பார்ட்டிகளை
எல்லாம் தலையில் தட்டி உட்கார வைத்த அண்ணாமலை ஃபைல்ஸ் வெளியானால் மட்டுமே தங்களுக்கு
விடிவு கிடைக்கும் என்று அவர்கள் அனைவரும் திருச்சி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அவர்களில் சிலர் சூர்யாவுக்கு சில ஆதாரங்களையும் கொடுக்கிறார்கள்.
அதாவது, கரூரில் பிரமாண்டமான டைல்ஸ் ஷோரூம், பைனான்ஸ், தாராபுரத்தில்
பிரமாண்டமான செங்கல் சூலை, கோவையில் மனைவி பெயரில் ரியல்எஸ்டேட் தொழில்…’’ என்று
வரிசையாக சுட்டிக் காட்டுகிறார்கள்.