Share via:
பீகார் மாநிலத்தில் போராட்டம் நடத்திய தேர்வர்கள் மீது போலீசார் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு 70வது சிவில் சர்வீஸ் தேர்வை முன்பு போலவே நடத்தக் கோரி தேர்வர்கள் திடீரென்று ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள்.
பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் வேறு வழியின்றி போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த தடியடி குறித்து கருத்து தெரிவித்த டி.எஸ்.பி. அனுகுமாரி பேசும்போது, முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது சட்டவிரோதமானது. தேர்வர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் குழுவில் 5 பேரின் பெயர்களை நாங்கள் கோருகிறோம் என்று கூறினார். தேர்வர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.