Share via:
சென்னையில் நேற்று (டிசம்பர் 6) சட்ட மேதை அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், வி.சிக. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட, அம்பேத்கரின் பேரன் அதனை பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் நாற்காலியில் அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையுடன் சேர்ந்து விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் இணையத்தில் வைரலானது.
விழாவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, விஜய்யின் பேச்சை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொன்னதற்கு களத்திற்கே வராதவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய இலக்கு 200 தொகுதிகள் கிடையாது. 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும்.
2026 தேர்தல் தி.மு.க.வின் வெற்றி குறித்து அதிமேதாவிகளாக தற்குறிகளாக சிலர் விமர்சனம் செய்கின்றனர் என்று விஜய்யை பகிரங்கமாக கடுமையான விமர்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் வீட்டிற்கு அழைத்து நிவாரண உதவி செய்தது குறித்து மேடையில் விஜய் விளக்கினாலும், அதையே திராவிடக் கட்சிகள் குறி வைத்து பேசி வருகிறது.