News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

யார் சூப்பர்ஸ்டார் என்று தொடங்கிய பஞ்சாயத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடுமையான மல்லுக்கட்டு நிலவியது. ரஜினியின் வேட்டையன் படத்தை கடுமையாக டிரோல் செய்து விஜய் ரசிகர்கள் அவமானப்படுத்தினார்கள்.

விஜய் அரசியல் மாநாட்டை ரஜினி ரசிகர்கள் அநியாயத்துக்குக் கிண்டல் செய்தார்கள். புதிய கட்சி அறிவிப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். அதை விஜய் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே, இரண்டு பக்கமும் மோதல் நடந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி சீமான் வரையிலும் வாழ்த்து தெரிவித்தார்கள். விஜய் வாழ்த்து சொல்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஒரு வழியாக வாழ்த்து தெரிவித்தார். விஜய் தெரிவித்த வாழ்த்தில், ‘’பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் விஜய்யை விரட்டி விரட்டி அடிக்கிறார்கள். அதாவது, ‘’எந்த பட்டத்துக்காக நாக்கை தொங்கப்போட்டு அலைஞ்சியோ, கடைசியா உன் வாயால சொல்ல வைச்சாங்க பார்த்தியா… அதுதாண்டா சூப்பர் ஸ்டார்’’ என்று வெளிப்படையாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி, ‘’இத்தனை வருஷமா இல்லாத அக்கறை இப்போ கட்சி தொடங்கியதும் வருது. எல்லோருக்கும் தெரியும் நீ காக்கா… அவர் கழுகு. நீ எப்படி மண்டி போட்டாலும் உனக்கு ஓட்டு இல்லை போடா’’ என்று அநியாயத்துக்கு கிண்டல் செய்கிறார்கள்.

‘’நீ எப்படியும் எங்க தலைவர் காலில் விழுவேன்னு தெரியும், இத்தனை சீக்கிரம் வந்து சேருவேன்னு நாங்களே நினைக்கலை… நீ எத்தனை வாழ்த்து சொன்னாலும்…’’ என்று கெட்ட வார்த்தைகளில் அநியாயத்துக்குத் திட்டுகிறார்கள். இவை எல்லாமே ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் செளந்தர்யா ரஜினிகாந்த் டீம் செய்வதாக சொல்லப்படுகிறது.

இதற்கு விஜய் ரசிகர்கள், ‘’பெருந்தன்மைன்னா என்னன்னு எங்க தலைவர்கிட்டே இருந்து கத்துக்கோங்க… எங்க தலைவர் ஜெயிச்சு வந்ததும் உங்க தலைவர் வந்து காலில் விழுவார்’’ என்கிறார்கள். போட்டி பலமாத்தான் இருக்குது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link