Share via:
நாடாளுமன்றத்தை முடக்கும்
அளவுக்கு எதிர்க்கட்சிகள் இத்தனை எதிர்ப்பு காட்டிய பிறகும் அதானி மீது விசாரணை நடத்துவதற்கு
மத்திய அரசு முன்வராதது சாதாரண பொதுமக்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இந்த
நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தைக் கையில் எடுத்து அதானி விவகாரத்தில் இருந்து
எதிர்க்கட்சிகளை திசை திருப்புகிறார் மோடி.
இது குறித்துப்பேசும்
அரசியல் ஆர்வலர்கள், ‘’இன்று இந்தியாவையே
அதானிக்கு விற்கும் வேலையை தான்
மோடி அரசு செய்து வருகிறது.
நிலக்கரி இறக்குமதி, ஊழல் சோலார் ஊழல்,
இண்டன்பர்க் அறிக்கை, அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை என இவ்வளவு
நடந்த பிறகும் கூட இந்தியாவில்
மத்திய அரசு அதானி மீது
ஒரு முதல் தகவல்
அறிக்கை கூட பதிவு செய்து
விசாரிக்க தயாராக இல்லை.
அதானி மற்றும் இந்த ஊழல்களில்
ஈடுபட்ட அரசு பொது ஊழியர்கள்
மீது விசாரணை எப்பொழுது?? அதானி
மோடி நண்பர் என்பதால் தான்
எந்த விசாரணையும் நடைபெறாமல் உள்ளதா?? அதேநேரம் அதானியை தமிழகத்தில் சந்தித்தது யார் என்று கேள்வி கேட்கும்
அண்ணாமலை மோடி ஏன் சந்தித்தார் என்று கேள்வி எழுப்புவாரா..?
இதைத் தவிர இந்தியாவில் உள்ள
துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை
ஒவ்வொன்றாக அதானிக்கு கொடுத்து வருவதை
நாம் அனைவரும் பார்த்துக் கொண்டு
தான் இருக்கிறோம். அதானி மோடி அரசின்
புதிய ஈஸ்ட் இந்தியா கம்பெனியாக
உருவெடுத்து வருகிறது . ஆனால், இந்த விவகாரத்தில் இருந்து எதிர்க்கட்சிகளை
திசை திருப்புவதற்காக நிறைவேற்ற முடியாத ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பா.ஜ.க. கையில்
எடுத்து திசை திருப்பும் அரசியல் செய்துவருகிறது’’ என்கிறார்கள்.
அண்ணாமலையும் மோடியும்
தான் பதில் சொல்ல வேண்டும்.