Share via:
ஊருக்கு உபதேசம்
செய்வதில் தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே முடியாது. திராவிடம், பகுத்தறிவு
என்று பேசிக்கொண்டே கோயில் கோயிலாக வீட்டுப் பெண்களை அலையவிட்டு மக்களைக் குழப்புவார்கள்.
அந்த வழியில் சனாதன எதிர்ப்புக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தைரியமாகப் பேசிய
உதயநிதி, அதற்காக தோஷம் கழித்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி ரகம்.
இது குறித்து திருவரங்கத்தைச்
சேர்ந்த ரங்கராஜன் என்பவர், ‘’மேடையில் சனாதனத்தை டெங்கு போல ஒழிப்போம் என்று பேசினார்
உதயநிதி. அவர் அப்படி பேசிய பேச்சால் தோஷம்
வந்து 2026 தேர்தலில் தோல்வி அடைய விட வாய்ப்புள்ளது என்று தங்கள் குடும்ப ஜோதிடர்
சொல்லிவிட்டார். ஆகவே ஆரிய சனாதனவாதிகளை வீட்டுக்கே அழைத்து அவர்ளுக்கு பாத பூஜை செய்து
தோஷத்தை கழித்திருக்கிறார்..’’ என்று வெளிப்படையாகப் பேசினார்.
உடனே, ‘’எங்கள் உதயநிதி
அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் இல்லை, அவர் கொள்கைக் குன்று. திராவிடப் போர்வாள்’’
என்றெல்லாம் திமுக.வினர் கம்பு சுற்றி வந்தனர். இந்த நிலையில் ஒரு படத்தை எதிர் குரூப்
ரிலீஸ் செய்திருக்கிறது.
அதோடு, ‘’உதயநிதி
ஆத்துக்குள்ளேயே போய் பச்ச ஜலம் கூட குடிக்கமாட்டேன்னு சனாதன தீண்டாமையையும் காட்டிருக்கார்
ஜீயர் வாள் எந்த ஆரிய பிராமனீய எதிர்ப்பும் புரட்சியும் இல்லாமல் நவதுவாரத்தையும் பொத்திக்கொண்டு
மூன்று ஜீயர் வாள் பாதத்தையும் ஜலத்தால் கழுவி, நண்ணீரை குடித்து, தலையில் தெளிச்சிண்டு,
பாதங்களை பூவால் அலங்காரம் செய்து, சாஷ்டாங்கமாக விழுந்து, செவித்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்
உதயநிதி வாள்.
இந்தப் பரிகாரத்திற்குப் பெயர் “பிராமண தோஷம்
நிவர்த்தி பரிஹாரம்” ஆம். திராவிடத்தின் சனாதன எதிர்ப்பு, டெங்கு கொசு ஒழிப்பு
நாடகங்கள் அம்பலம். திராவிடர்கள் ஆரியர்களின் வம்சவாளிகள்தான், சனாதன ஹிந்துத்துவா
வாதிகள்தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்’’ என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படம்
உண்மைதானா… உதயநிதி இரட்டை வேடம் போடுகிறாரா அல்லது ஆரியவாதிகளின் பொய்யான புகைப்படமா
என்பதை தி.மு.க.வினர் ஃபேக்ட் செக் செய்து மக்களுக்குத் தெரியவிக்க வேண்டியது அவசியம்.