News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் போதைப் பழக்கம் அதிகரித்துவிட்டது என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில்தான் ஜாஃபர் சாதிக் விவகாரம் வெளியே வந்தது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு ஜாஃபர் சாதிக் தமிழக அரசை பயன்படுத்தியிருக்கும் விவகாரத்தை எழுப்பி அண்ணாமலை மீண்டும் குடைச்சல் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை, ‘’சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.

ஜாஃபர் சாதிக், 40 லட்சம் ரூபாயை ரொக்கமாக முதலீடு செய்து,தனது கூட்டாளியான ரமேஷ்க்கு ரூ. 1 கோடி முதல் 1.5 கோடியை வரை கோலெசென்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில், டிசம்பர் 2022 முதல் ஜனவரி முதல் 2023 காலகட்டம் வரை ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார், இந்த நிறுவனத்திற்கு ஜாபர் சாதிக் முதலீடு செய்த பணத்தின் சோர்ஸ், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் வந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. லாபப் பகிர்வு ஜாபர் சாதிக்கிற்கு 51:49 என்ற விகிதத்தில் முடிவு செய்யப்பட்டதாக, ஆதாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீ அப்பு டைரக்ட் நிறுவனத்திற்கு பொருட்கள் விற்பனையானது, ரமேஷுக்குச் சொந்தமான கிரீன் காஸ்மிக் இன்ஃப்ரா என்ற மற்றொரு ஷெல் நிறுவனம் மூலம் வழிவகுத்தது. மேட்ரிக்ஸ் நிறுவனத்தில் இருந்து கோலெசென்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்து, அதன் பிறகு கிரீன் காஸ்மிக் இன்ஃப்ரா மூலம் ஸ்ரீ அப்பு டைரக்ட் நிறுவனத்திற்கு அந்த பொருட்களை கைமாற்றி, இந்த சுற்றறிக்கை வர்த்தகம், போதைக் கடத்தல் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது என்று அமலாக்கத்துறை விசாரணையை மேற்கோள்காட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து அன்பில் மகேஷ் இது வரை பதில் அளிக்காத நிலையில், ‘’தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாஃபர் சாதிக் பற்றி இன்னும் எத்தனை கதைகள் எழுதுவீர்கள்..இதில் புதுவை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரங்கசாமிக்கும் பா.ஜ.க.வுக்கும் இதில் கூட்டு இருக்கிறதா?’’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link