Share via:

சிடோ புயல் தாக்கியதில் மயோட் தீவில் 1,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் மடகாஸ்ர் நாட்டின் அருகே பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மயோட் தீவு அமைந்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மக்கள் தொகை இத்தீவில் நேற்று (டிசம்பர் 15) அதிகபயங்கர புயல் தாக்கியது. சிடோ என்று பெயரிடப்பட்ட 124 மைல் வேகத்தில் வீசிய புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து, சாலைகள், கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் மொத்தமாக பாதிக்கப்பட்டன.
புயலை தாக்குபிடிக்க முடியாததால் மயோட் தீவு இடுகாடு போல் காட்சியளிப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மீட்புப்படையினர் அளித்த தகவல்படி நேற்று இரவு 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 200 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் இருந்து பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மயோட் தீவு நிர்வாகி பிரான்காயிஸ் சேவியர் பியூவில்லி இந்த பயங்கர புயல் தாக்குதல் குறித்து கூறும்போது, ‘‘புயல் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கலாம். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் நிலவி வருகிறது. மேலும் இதுவரை பலி எண்ணிக்கையை சரியாக கணிக்க முடியவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.