News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 

 மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் முறையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக புற்றுநோயால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

இத்தடுப்பூசி இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

 

அந்த வகையின் இன்று (டிசம்பர் 18) புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும், இந்த தடுப்பூசியானது வருகிற 2025ம் ஆண்டு முதல் சந்தையில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதில் முத்தாய்ப்பாக இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து ரஷிய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் பேசும்போது, ‘‘எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலான புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இந்த தடுப்பூசி உடலில் உள்ள எம்.ஆர்.என்.ஏ. மோலெக்யூல்லை பிரதி எடுத்து அதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது உண்மையாகவே மருத்துவ கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link