News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மற்ற மாநிலங்களில் எப்படியென்றாலும் தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு கட்சிகளை இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில்லை. அதனால் இஸ்லாமியர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்த காரணத்தாலே அண்ணாமலை வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கோவையில் பிரசாரம் செய்கிறார். அதே பாணியில் சீமான் இறைதூதர் குறித்துப் பேசியிருப்பது கடும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் பேசிய சீமான், ‘’இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுடைய ஆறாவது கடமை தி.மு.க.வுக்கு வாக்கலிப்பது என்ற முடிவில் இருக்கும்போது, இறைத் தூதரே வந்து திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாமென்று சொன்னாலும், நீங்கள் இறைதூதரே இல்லை என மக்கள் சொல்வார்கள்’’ என பேசியது சிக்கலாக மாறியிருக்கிறது. ஏனென்றால் இறை தூதரை யாரும் எதற்காகவும் விமர்சனம் செய்வதை இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை.

இதுகுறித்துப் பேசும் இஸ்லாமியர்கள், ‘’தமிழ் முஸ்லீம் சமூகம் காலம் காலமாக தன்னுடன் யார் நிற்கிறார்களோ அவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு, சிஏஏ சட்டத்தை உண்மையான நோக்கத்தோடு எதிர்த்தது என நிகழ்காலத்தில் பல சம்பவங்கள் முஸ்லீம்கள் ஏன் திமுகவோடு நிற்கிறார்கள் என்பதை விளக்கும்.

பாபர் மசூதி இடிப்பின் போது பாதுகாப்பின்மையை உணர்ந்த முஸ்லீம்கள் பக்கம் நின்றது; மிலாடி நபிக்கு அரசு விடுமுறை என வரலாற்றிலும் பல சாட்சிகள் உண்டு. முஸ்லீம் சமூகத்தை திமுகவை விட்டுப் பிரிக்க வேண்டும் என்ற யாருடைய அஜெண்டாவிற்கோ வேலை பார்த்து அது முடியாத சூழலில் குழம்பிப் போய் இருக்கிறார் சீமான். வாக்களிக்காத முஸ்லீம்களை சாத்தானின் பிள்ளைகள் என்று சொன்ன சீமான் இப்போது இறைத்தூதரை நேரடியாக அவமதிப்பு செய்திருக்கிறார்’’ என்று கொதிக்கிறார்கள்.

இதற்கு நாம் தமிழர் தம்பிகள், ‘’திமுகவுக்கு வாக்களிப்பது ஆறாவது கடமை என்று முஸ்லீம் லீக் தலைவர் காதர் முகைதீன் சொன்னபோது வராத கோபம் இப்போது மட்டும் ஏன் வருகிறது. இதை மானமுள்ள எந்த இசுலாமியனாவது இப்படி பேசுவதை ஏற்பானா? இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்ற் சொல்லும் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பது நியாயமா?’’ என்று கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link