Share via:
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து
ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அவரது ஆளுமையை நிரூபித்துக்
காட்டினார். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் விஜய் கட்சி களம் இறங்கும் என்று
எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில் விஜய் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி
பேசியதாக சொல்லப்படும் ஆடியோ கட்சிக்குள் கடும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.
அந்த ஆடியோவில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி பேசுகையில், விஜய் கட்சிக்கு வாக்கு சதவிகிதம்
2% தாண்டாது என்றும் இரவு
நேரத்தில் புஸ்ஸியாரிடம் விஜய் எல்லாவற்றையும் சொல்லி
விடுகிறார். விஜய்க்கு அரசியலில் அத்தனை ஆர்வம் இல்லை.
புஸ்ஸி ஆனந்திற்கு முடிவு எடுக்கும் திறமை இல்லாத காரணத்தால் அவருக்குப் புரியவைக்க
முடியவில்லை. விஜய் அரசியல் பயணம் தேறாது’’ எனும் வகையில் பேசியிருக்கிறார்.
இது உண்மையான ஆடியோ
இல்லை என்றும் விஜய்யிடம் இருந்து ஜான் ஆரோக்கியசாமியை பிரிப்பதற்கு செய்யப்பட்டும்
சூழ்ச்சி என்றும் விஜய் கட்சியினர் கூறிவருகிறார்கள். அதேநேரம், விஜய் கட்சியினரே புஸ்ஸி
ஆனந்திற்கு எதற்கு கட்சியில் இத்தனை முக்கியத்துவம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து விஜய்
ரசிகர்கள் சிலர், ‘’எனக்கு தலைவர் விஜய் முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
ஆனால், நமது கட்சி செயலுக்கு வந்த இத்தனை நாட்களாகியும் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்துக்குக் கூட போராட்டம் நடத்தவில்லை. எல்லா கட்சிகளும் போராட்டம்
நடத்தும்போது நமது கட்சி மட்டும் அமைதியாக இருக்கலாமா..? விஜய் நேரடியாகவே போராட்டத்துக்கு
வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது நிர்வாகிகள் போராடுவதற்கு அனுமதி கொடுக்கலாம்.
இப்படி அமைதியாக கட்சி இருந்தால் என்ன அர்த்தம்? நமது தலைவருக்கு இணையாக ஆனந்த் புகைப்படத்தையும்
போடுவதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்
இதற்கு விஜய் கட்சியினர்,
‘’தி.மு.க.வினர் திட்டமிட்டு இப்படி திசை திருப்புகிறார்கள். இந்த சூழ்ச்சிக்கு யாரும்
பலியாக வேண்டாம். 2026 தேர்தலில் களம் இறங்கி ஆட்சியைப் பிடிப்போம்’’ என்கிறார்கள்.
அதேநேரம் ஜான் ஆரோக்கியசாமி
ஏற்கெனவே கமலஹாசன், சீமான், அன்புமணி தொடங்கி அவர் கை வைத்த எல்லாமே போண்டியாகி விட்டார்கள்.
அடுத்தது விஜய் தான். ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ வெளியானதை அடுத்து புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு
சிக்கல் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.