News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டெல்டே வெதர்மேன் ஹேமச்சந்தர் அவ்வப்போது புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுபவர். சமீபத்திய ஃபெஞ்சல் புயல் சென்னையை விட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டது. அதனால் சென்னை மக்கல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னமும் புயல் அபாயம் நீங்கவில்லை என்று டிசம்பர் மாத கணிப்புகள் வெளியிட்டுள்ளார்.

அவரது கணிப்புப் படி, ‘’டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும். இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார். குறிப்பாக வடகடலோரம் டெல்டா மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டனம், திருவாரூர், காரைக்கால் தஞ்சாவூர் மாவட்டங்களில் இயல்பிற்கு மிக எஞ்சிய மழை பதிவாக கூடும்.

கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழை வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாக கூடும்.

டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய கூடும். இதுவரை தமிழகம் மூன்று சுற்று மழையை பெற்றுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மேலும் மூன்று சுற்று வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்க்கலாம்.

நான்காவது சுற்று பருவமழை டிசம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீடிக்க கூடும். நன்குமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/ தாழ்வு மண்டலம் உருவாகி நான்காவது சுற்று மழையை கொடுக்கும். டெல்டா & வடகடலோர மாவட்டங்கள் டிசம் 11ம் தேதி இரவு முதல் 16ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிரதானமாக மழை பெறகூடும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த சுற்றில் மழை பெறும் என்பதும் குறிப்பிடதக்கது.

டிசம்பர் 20ம் தேதியை ஒட்டி தெற்கு வங்ககடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகரும், இதன் காரணமாக ஐந்தாம் சுற்று பருவமழை டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து மழையை கொடுக்கும் நிகழ்வுகள் உள்ளது. தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் நிரம்பும் தருணத்தில் இருப்பதாலும், மண்ணில் ஈரப்பதம் வெகுவாக அதிகரித்து இருப்பதாலும் வரக்கூடிய 4 வது, 5ம் சுற்றுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

குறிப்பாக ஃபெஞ்சல் பாதித்த  மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை! 8. டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கதிர் பரியும் சூழலில் இருப்பதால் இனி வரக்கூடிய நாட்களில் மிககனமழை, அதித கனமழை வேளாண்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறுகிய கால பெருமழை நிலச்சரிவு, பெருவெள்ளம் மற்றும் மக்களின் பொருளாதாரம் போன்ற வற்றையும் பாதிப்படைய செய்யும் சூழல் நிலவுகிறது.

இப்பதிவு மக்களை அச்சப்படுத்த பதிவிடவில்லை,பருவமழையின் வரக்கூடிய சுற்றுகளில் மிகுந்த கவனம் தேவை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பகிரப்படுகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

உஷாரா இருந்துக்கோங்க மக்களே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link