Share via:
வங்கதேச நாட்டில், ஹிந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு
ஆதரவாகச் செயல்படும் வங்கதேச அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும்
இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு காவல்
துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வழக்கம் போல் அண்ணாமலை இந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகி கைதில் இருந்து
தப்பியிருக்கிறார்.
இது குறித்து இன்று அண்ணாமலை, ‘’வங்க தேசத்தில் ஹிந்து மக்கள்
மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு,
அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ள நிலையில், திமுக அரசு மட்டும் அனுமதி வழங்க
மறுத்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும், பா.ஜ.க. த்த தலைவர்களையும்,
தொண்டர்களையும் கைது செய்திருக்கிறது.
வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது,
ஜனநாயக உரிமை. இதனை முடக்க நினைக்கும் திமுகவின் போக்கு, மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்…’ என்று அறிக்கை
வெளியிட்டிருக்கிறார்.
வங்க தேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து என்றால் மோடி தானே காப்பாற்ற
வேண்டும், ஏன் மோடி அமைதியாக இருக்கிறார். அப்படியென்றால் மோடிக்கு எதிராகப் போராட்டம்
நடத்துகிறார்களா. அண்ணாமலை டெல்லியில் இருக்கிறார் என்றால், அங்கேயாவது போராட்டம் நடத்தியிருக்கலாமே…
இது போன்ற விஷயங்களில் எல்லாம் அண்ணாமலை தப்பிவிடுவது என்று அவரது ஆட்களே ஆச்சர்யமாகக்
கேள்வி எழுப்புகிறார்கள்.
ரஷ்யப் போர், இஸ்ரேல் போரை எல்லாம் மோடியால் தடுத்து நிறுத்த முடியும்
என்று பேசுபவர்களால் அண்டை நாட்டில் இருக்கும் இந்துக்களை மோடியால் காப்பாற்ற முடியவில்லை
என்று போராட்டம் நடத்துவது வேடிக்கை தான்.