News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வரும் 2026 தேர்தலில் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவந்தார். அதற்கு ஏற்ப நடிகர் விஜய் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரது செயல்பாடுகளும் இருந்துவந்தன.

ஒரு கட்டத்தில் தி.முக.வின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாத திருமாவளவன், தாங்கள் தொடர்ந்து ஸ்டாலினுடன் பயணிப்போம் என்று கூறி, அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

விஜய் இருந்தால் போதும் தி.மு.க.வை அலறவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டிருந்தார். தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

எத்தனை சீட் என்றெல்லாம் ஹேஸ்யங்கள் வெளியிடப்பட்டன. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த விஜய், திடீரென, ‘தாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். மற்ற விஷயங்கள் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்’’ என்று ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சுக்கு முடிவு கட்டிவிட்டார்.

விஜய்யிடம் இப்படி திடீரென மனமாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் அண்ணாமலை என்று அ.தி.மு.க.வினர் கடுமையாகக் கொந்தளிக்கிறார்கள். இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’விஜய்யுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி முடிவாகிவிட்டால் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி செல்லாக்காசாகிவிடும். அதனாலே, இப்போது நீங்கள் கூட்டணி இல்லை என்று அறிவிக்கச் செய்துவிட்டார். அது அன்பு வேண்டுகோளா அல்லது மிரட்டலா என்று தெரியவில்லை. ஆனால், விஜய் பல்டி அடித்துவிட்டார். ஆனாலும், கடைசி நேரத்தில் எங்களுடனே கூட்டணிக்கு வருவார்’’ என்கிறார்கள்.

விஜய் கட்சியினருக்கும் பா.ஜ.க.வை விட அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதற்கே விருப்பம் இருக்கிறதாம். அண்ணாமலை வந்த பிறகு தான் இதன் உண்மைத்தன்மை தெரியவரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link