News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உதயநிதி அணியினர் பேச்சுப்போட்டி நடத்தி தமிழகத்தில் பரபரப்பு ஊட்டியது போன்று கனிமொழி வினாடி வினா போட்டி நடத்தி தனி யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். இது உதயநிதியுடன் நேரடிப் போட்டி என்றே பார்க்கப்படுகிறது.

கட்சிக்குள் தன்னுடய இருப்பைக் காட்டும் வகையில் பள்ளி மாணவர்களை கருணாநிதி சமாதிக்கு அழத்துச்சென்றுள்ளார். இது குறித்து கனிமொழி, ‘’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்படும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியில், இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரோடு, தலைவர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்…’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை இங்கு கூட்டிச்சென்ற காரணம் குறித்துப் பேசும் கனிமொழி ஆதரவாளர், ‘’தூத்துக்குடியில் தன்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உதயநிதி நடத்திய விழாக்கள் கனிமொழிக்கு கடும் கோபத்தை உருவாக்கிவிட்டது. அதனாலே உதயநிதிக்குப் போட்டியாகத் தன்னை வெளிப்படையாக காட்டிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

வரும் தேர்தலில் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு 40 சதவீதம் என்றும் ஸ்டாலின் சீனியர்களுக்கு 50 சதவீதம் என்றும் துர்காவுக்கு 10 சதவீதம் சீட்டும் கொடுக்கப்படுவதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். இதில் கனிமொழியை யாரும் கலந்து பேசவில்லை, ஆதரவாளர்களை முழுமையாக வெளியேற்றும் முயற்சியும் நடக்கிறது. ஆகவே, இனியும் அமைதியாக இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். தன்னுடைய ஆதரவாளர்களுக்குத் தமிழகம் முழுக்க பரவலாக 25 சதவீதம் சீட் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது நிறைவேற்றப்படவில்லை என்றால், தேர்தல் நெருக்கத்தில் தர்மயுத்தத்திற்குத் தயாராகிறார். இவருக்கு சில சீனியர்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை ஏமாற மாட்டார்’’ என்கிறார்கள். அதேநேரம் உதயநிதி அணியினரோ, கனிமொழிக்குப் பின்னே யாரும் இல்லை, சீறத் தொடங்கினால் மு.க. அழகிரிக்கு நேர்ந்த கதியே இவருக்கும் நடக்கும் என்கிறார்கள். யுத்தம் ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link