Share via:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து க்ட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வினாலும் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வினாலும்
நீதி கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி விஜய் கட்சியில் சேர்ந்திருக்கிறார் ஸ்லோனின்
தாயார். இவரே விஜய் கட்சியின் வேட்பாளர் என்று தெரிய வந்திருப்பது தூத்துக்குடி தி.மு.க.வினரை
அதிர வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில்
13 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன் இருந்தவர் ஸ்னோலின். தூத்துக்குடி
மக்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்ட போராட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்
என்ற கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த மக்கள் திரளில் இருந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்
தலைவர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். 6 ஆண்டுகள், 3 தேர்தல்கள்: தூத்துக்குடி
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காக
காத்திருக்கின்றனர், இனியும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்கமுடியாது
என்று ஸ்லோனின் தாயார் விஜய் கட்சியில் இணைந்திருக்கிறார்.
இது குறித்துப் பேசும் ஸ்லோனின் தாயார் வனிதா, ‘’நாங்கள் ஸ்னோலின்
மறைவு குறித்து வேதனையுடன் வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தோம். அப்போது திடீரென விஜய்
வந்தார். எங்களுடன் சமமாக அமர்ந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். மிகவும்
துயரப்பட்டார். ‘தொந்தரவு செய்திருந்தால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்றார்.
மிகவும் எளிமையாக வந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்து போய்விட்டார்.
இந்த மகன் என்ற அவர், கடந்த தினத்தில் மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு கடிதம் ஒன்றை கொடுப்பதற்கு
நினைத்தேன்.. ஆனால், அங்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இருந்ததால் என்னால்
கடிதத்தை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.. தற்போது எங்கள் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் கட்சியில் உறுப்பினராகி விட்டோம்.. மேலும் 2026-ல் விஜயை முதலமைச்சராக அரியணையில்
அமர்த்தவோம்’’ என்று கூறி இருக்கிறார்.
ஸ்லோனின் தாயார் தி.மு.க. மீது அதிருப்தியில் இருப்பதைப் பயன்படுத்தி
அவரை வேட்பாளராக அறிவிக்கும் திட்டத்திலேயே கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக நினைக்கும் எதிர்ப்பாளர்கள்
ஒட்டுமொத்தமாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் சம்பவம் இந்த பகுதி தி.மு.க.வினரை அதிர
வைத்துள்ளது.