Share via:
தென்மேற்கு வங்கக்கடல் இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக தகவல் , இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது .
அதை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று (11/11/2024) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் கணித்தது . அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் , மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்தது .
.
நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடத்தக்கது .