Share via:
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது . அதில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. நவம்பர் மாதம் பிறந்த பிறகு மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று (11/11/2024)இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
நேற்று (11/11/2024)இரவு பெய்த மழை தொடர்ந்து விடிய விடிய இன்று (12/11/2024)காலை வரை தொடர்ந்தது.
சென்னையில் நேற்று இரவு விட்டு விட்டு பெய்த மழையால் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னையில் இன்று (12/11/2024) தொடர் மழையால் மாவட்ட ஆட்சியர் மூலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது .
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னையில் 2024ன் வழக்கமான வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த மழை பெரும்பாலும் விட்டு விட்டு பெய்வதற்கான வாய்ப்பு தான் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .