Share via:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது . அதன்பின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கின .
விஸ்தாரா பெயரிலான கடைசி விமானம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்று (நவம்பர் 11)இரவு டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது .
அதை தொடர்ந்து ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா விமான நிறுவனம் இணைந்த பின் முதல் விமானம் (AI2286) தோஹாவில் இருந்து நேற்று (11/11/2024) இரவில் புறப்பட்டு இன்று (12/11/2024) அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தது .
இரண்டு நிறுவனங்களும் சேர்ந்த பிறகு இதுவே முதல் சர்வதேச விமான சேவை ஆகும் .இதை தொடர்ந்து இரவு 1.30 மணி அளவில் மும்பையில் இருந்து டெல்லிக்கு AI2985 என்ற விமானம் புறப்பட்டது .
அதை தொடர்ந்து விமானங்கள் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விமான எண்கள் மாற்றம் குறித்து , முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .