News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அதற்கு மனப்பூர்வமாக வாழ்த்து சொன்னவர் திருமாவளவன். ஆனால், அவர் தான் இப்போது விஜய் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். திருமாவளவனை குறிப்பிட்டு அவமானப்படுத்தியதாலே ஆவேசம் தணியவில்லை என்கிறார்கள். இதையடுத்து இரண்டு பக்கமும் இன்றும் தொடர்கிறது வலைதள மோதல்.

திருமாவளவனின் கோபம் குறித்துப் பேசும் அவரது கட்சியினர், ‘’மாநாடில் விஜய் அதிகாரப் பகிர்வு குறித்து அறிவித்திருப்பது விசிகவை தன் பக்கம் இழுக்கத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் திருமாவளவனை பதவிக்கு அலைபவர் போன்று மிகக்குறைவாக எடை போட்டிருக்கிறார் விஜய்.

ஆட்சியில் பங்கு என்பதைக் குறிப்பிட்டு, கூட்டணிக் கட்சியினரின் வாக்குகளுக்கான, உழைப்புக்கான உரிய அங்கீகாரம் அது எனப் பேசியிருக்க வேண்டும். விசிகவின் சுயமரியாதை பாதிக்காத வகையில் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் போனா வராது பொழுது போனா கிடைக்காது என்ற ரேஞ்சில் கேவலமாக இடது கையில் பிச்சை போடுவதுபோல மேடையில் பேசியதும், பொலிடிகல் அணுகுண்டு என தனக்குத்தானே பில்டப் கொடுத்துக் கொண்டதும்தான் திருமாவளவனின் கோபத்திற்குக் காரணம்’ என்கிறார்கள்.

இதற்காக திருமாவளவன் கோபப்பட்டதும் விஜய் ரசிகர்கள் அவரை சகட்டுமேனிக்கு கடுமையாக விமர்சனம் செய்துவிட்டதை அவரது கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விசிகவுக்கு ராமதாஸ்க்கு அடுத்து விஜய் தான் முக்கிய எதிரி என்ற பட்டியலில் சேர்ந்துவிட்டார் என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link