News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய்யின் கொள்கை எதுவாக இருந்தாலும் அவர் என் தம்பி அவருக்கு நான் ஆதரவு கொடுப்பேன் என்று பேசிய சீமான் இப்போது மிகக் கடுமையான எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறார். சீமான். இதுவரை உடன்பிறப்புகளை எதிர்த்து காரசாரமாக சண்டை போட்டு வந்த விஜய் ரசிகர்கள் ஈந்த பேச்சுக்கு என்ன எதிர்வினை செய்வது என்று தடுமாறுகிறார்கல். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காதபடீ எடப்பாடி டீம் மறைமுகமாக சீமானுக்கு எதிராக சமூகவலைதளத்தில் கடுமையான தாக்குதலில் இறங்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘விஜய்க்கு சீமான் எதிரியல்ல. சீமானுக்கு விஜய்யும் எதிரியல்ல. இந்த நேரத்தில் சீமான் தேவையே இல்லாமல், விஜய் மீது கடுமையான தாக்குதல் நடத்துகிறர். இதை பார்க்கும்போது தி.மு.க.வின் வலையில் சீமான் வீழ்ந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அரசியலுக்கு அவர்கள் புதிது என்பதால் பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

விஜய் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரோ இல்லையோ, அவருக்கு நாங்கள் இப்போது உதவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் தான் எங்கள் மேலிடம் ஒப்புதலோடு சீமானுக்கு எதிர்வினை ஆற்றிவருகிறோம். ஏற்கனவே வெளிப்படையாக விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியிருக்கிறார். இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எனவே, எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாலே இதனை செய்கிறோம்’’ என்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்கள், ‘’சீமான் எங்களுக்கு எதிராக கடுமையாகப் பேசினாலும் நாங்கள் அவரைப் போன்று தரம் கெட்டு அரசியல் செய்ய மாட்டோம். தி.மு.க.வினரே எங்களுடைய எதிரி என்பதால் அவர்களுடன் மட்டுமே மோதுவோம். எங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் களம் இறங்கி சீமானுக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆரம்ப காலத்தில் இருந்தே மெச்சூர்டு அரசியல் செய்துவருகிறார். எங்களுக்கு நல்ல தோழமையாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது’’ என்கிறார்கள்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அ.தி.மு.க.வினர், ‘’விஜய்கிட்டே போய் கட்சியை அடமானம் வைச்சு அ.தி.மு.க.வுக்கு ஒரேயடியா குழி தோண்டி புதைச்சிடுவார் போல இருக்குது. இதுக்குப் பதிலா அ.தி.மு.க.வை நேரடியா விஜய் கட்சியுடன் இணைத்துவிடலாம்’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link