News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறிய நடிகர் விஜய் இன்று எங்களுடைய கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி என்று மாற்றி இருக்கிறார். இதனை சீமானுக்குக் கிடைத்த வெற்றி என்று நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது நடந்து முடிந்த முதல் மாநாடு மற்றும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவை குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுல்ளன.

இந்த கூடத்தில், “மதசார்பற்ற சமூகநீதி” மட்டுமே தவெகவின் கருத்தியல் என்று விஜய் கூறியிருக்கிறார். அதோடு, ‘’எங்களுடைய அரசியல் மிக மிக எதார்த்தமானது. தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சாமானியர்கள் பயன் பெறும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருக்க இடம் போன்றவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே தலையாய கடமையாகக் கொண்டு செயல்படுவோம்.

தவெகவின் சித்தாந்தம் என்னவென்றால் திராவிடமும் இல்லை தமிழ்த்தேசியமும் இல்லை. அவற்றை தனித்தனியாக ஏற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. ஆனால் நம் சித்தாந்தம் என்னவென்று யாராவது கேட்டால், மதச்சார்பற்ற சமூகநீதி சித்தாந்தம் என்று கூறியிருக்கிறார். அதோடு, யாருடைய எதிர்ப்பையும் கண்டுகொள்ள வேண்டாம், அவர்களை கண்டுகொள்ளாமல் செல்லுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான தீர்மானங்கள். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில்மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு, மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சீமான் ஆதரவாளர்கள், ‘’ஒரே ஒரு நாள் நாங்கள் விஜய்யை கடுமையாக அடித்ததில் கொள்கையை மாற்றிக்கொண்டார். இன்னமும் தெளிவாக கொள்கையை வரையறுத்து எங்களுடன் கூட்டணிக்கு வந்து சேர்வார்’’ என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link