News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க.வினர் உதயநிதியை களத்தில் இறக்கி இளைய தலைமுறையைக் கவரும் முயற்சியில் இருக்கிறார்கள். விஜய் ஒரு பக்கம் களத்தில் இறங்கி புதிய வாக்காளர்களை இழுக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இளைஞர்களுக்கு 1 லட்சம் பதவிகள் வழங்கும் வகையில் புதிய அணிகள் அறிவிக்கப்படுவதாகத் தெரிகிற்து.

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளது. இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கிளைக் கழக செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான உட்கட்சி தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக புதிதாக 1 லட்சம் கட்சிப் பதவிகள் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  இதற்காக புதிதாக பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட உள்ளன. எடப்பாடி பழனிசாமி பேரவை தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை உருவான பின்னர் உறுப்பினர் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்றது. 2 கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதோடு, விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களிடம் விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து கருத்துக் கேட்பு இருக்கும் என்றும் அதன் அடிப்படையில் பா.ம.க.. உள்ளிட்ட வலிமையான கூட்டணி ஏற்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link