Share via:
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, சீமான் திடீரென்று அந்நியனாகவும், திடீரென்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. ஏன் முதலில்தம்பி என்று சொன்னார்? பிறகு ஏன் லாரியில் அடிபட்டு சாகவேண்டும் என்று சொல்கிறார்? எல்லாவற்றுக்கும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
எப்போதும் ஒரே நிலைப்பாடு இருக்க வேண்டும். கடவுள் எல்லோருக்கும் பேசும் சக்தியை வழங்கியுள்ளதால், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது.
தங்களுக்கு யார் எதிரி என்பதை தெரிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போதுதான் அவர் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை நிறைய உள்ளது. அவருடைய வருங்கால செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.