News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் தலைவர்களில் தீவிரமான ஸ்டாலின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டவர் ரவிக்குமார் எம்.பி. ஒரு முறை தி.மு.க.வின் சின்னத்திலும் நின்று வெற்றி பெற்றவர். இதுவரை தி.முக.வுக்கு எதிராக எதுவுமே பேசியதே இல்லை. அவரே இப்போது தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது உடன்பிறப்புகளை அதிர வைத்துள்ளது. மேலும், திருமாவளவனும் விஜய்யும் ஒண்ணு சேரப் போவது உறுதி என்றும் தெரிவதாகச் சொல்கிறார்கள்.

வரும் 2026 தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் என்று விடுதலை சிறுத்தைகளின் தொல் திருமாவளவன் மிகவும் தெளிவாக ஒவ்வொரு சந்திப்பிலும் கூறிவருகிறார். அதேநேரம், ‘புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யை சந்திப்பது குறித்து அப்போது முடிவு செய்வோம். ஏனென்றால் இது ஒரு வருடத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி’ என்று ஒரு பொய்யை அழுத்தமாகச் சொல்கிறார்.

இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு மீது சாட்டையை விளாசியிருக்கிறார் ரவிக்குமார் எம்.பி. மாணவர்களுக்கு கந்தசஷ்டி பாராயணம் குறித்து கடும் கண்டனம் எழுப்பியிருக்கும் ரவிக்குமார், ‘’புதுமைப் பெண்’ திட்டத்துக்கு எதிராகப் ‘பழமைப் பெண்’ திட்டமா? தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அமைச்சர் சேகர் பாபுவோ புதுமைப் பெண்கள் திட்டத்துக்குப் பதிலாக பழமைப் பெண் திட்டத்தை செயல்படுத்துகிறார்.

கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை. உடனே ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தி.மு.க. அடிமையே இப்படி பேசுகிறார் என்றால், விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாட்டில் மாற்றம் உறுதி என்று உஷ்ணமாகிறார்கள் உடன்பிறப்புகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link