News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் மாநாடு நடத்தியதிலிருந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தி.மு.க.வுடன் மோதுவதற்கு அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்று நம்பியிருந்த ஒரு கூட்டம் இப்போது விஜய் பக்கம் சாய்வதைக் கண்டு அண்ணாமலை அதிர்ந்துபோயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதனால் இத்தனை நாட்களும் ஒழுங்காக படித்துக்கொண்டிருந்த அண்ணாமலை வேண்டுமென்றே பட்டாசு பிரச்னையைக் கிளப்பி கூட்டத்தை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றமே பட்டாசுக்கு தடை போட்டிருக்கும் நிலையில் இன்று அண்ணாமலை, ‘’பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

உடனடியாக பா.ஜ.க. ஆட்கள், ‘’வெடிச்சுடுவோம், கொளுத்திடுவோம்’’ என்று மறைமுகமாக விஜய்யை போட்டுத் தாக்குகிறார்கள். ஆனால், இது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் என்பது 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலைக்குத் தெரியாதா என்று பூவுலகின் நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இது குறித்து சுந்தர்ராஜன், ‘’கடந்த 50 ஆண்டுகளாகத்தான் நாம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் எனச் சொல்வதற்குக் காரணம் அது “கார்பன் வெளிப்பாடு” தொடர்பானது மட்டுமல்ல, இது மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால்தான். அமெரிக்காவில், ஒரு ஆள் எவ்வளவு கார்பனை வெளியிடுகிறார்கள், சீனாவில் எவ்வளவு தெரியுமா என்றெல்லாம் உளறிக்கொட்டி இருந்த காணொளியை வெளியிட்டு “மாசுபாடு பற்றி” உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டீர்கள்.

பட்டாசு பிரச்சனை என்பது நம் சுவாசம் சம்மந்தப்பட்டது, பட்டாசு வெடிப்பதால் அதில் உள்ள கன உலோகங்கள் காற்றில் கலந்து மாசு ஏற்பட்டு நுரையீரல் புற்று உள்ளிட்ட பல உடல் நலச் சிக்கல்கள் வரும், குழந்தைகள் சுவாசிக்கக் கஷ்டப்பபடுவர், ஆஸ்த்மா, நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் அல்லல்படுவதைப் பார்க்கலாம். நீங்க என்றைக்காவது தீபாவளிக்கு மறு நாள் சென்னையில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது ஒரு மருத்துவமனைக்குச் சென்று பார்த்துள்ளீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதேபோல் தி.மு.க.வினரும், ‘’1899 சிவகாசி கலவரமும் அதையொட்டிய மக்களின் வாழ்க்கை நெருக்கடியும் உருவானது. சிவகாசியில் செயல்பட்ட கிறிஸ்தவ மிசினரிகள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர். 1928 ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1963 ல் முதல் பட்டாசு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது’’ என்று அன்ணாமலையின் கலாச்சாரத்துக்கு வெடி வைத்திருக்கிறார்கள்.

அதோடு, ‘’அண்ணாமலை லண்டன்ல போய் படிக்கிறாரா அல்லது ஊர் சுற்றுகிறாரா? பொய் சொல்லி ஏமாத்துறதுக்குத்தான் அங்கே சொல்லித் தர்றாங்களா?’’ என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று நகர்ந்துவிடுவார் அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link