Share via:
அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது என்று தொடர்ந்து கூறிவந்த அத்தனை பேரின் வாயையும் அடைக்கும் வகையில், ஒற்றுமையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி மாஸ் செய்துவிட்டார். அதோடு, டிடிவி தினகரன் பக்கமிருக்கும் கொஞ்சநஞ்ச முக்கியப் புள்ளிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் ஸ்கெட்ச் படி கடந்த சில மாதங்களில் மட்டும் அ.ம.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியம் ஆகியிருகிறார்கள். அதன்படி, அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் அமமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த உசிலம்பட்டி மகேந்திரன் அமமுக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த G.முனியசாமி விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றிய காளிமுத்து அமமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெயக்குமார் அமமுக திருநெல்வேலி மாநகர மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ்குமார் அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் குமரன் அமமுக ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் A.M.சிவபிரசாந்த் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்திருக்கிறார்கள்.
இதேபோன்று அ.ம.மு.க.வினர் யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். எந்த காரணம் கொண்டும் பன்னீர் ஆட்களுக்கு மட்டும் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆக, அ.ம.மு.க.வை கரைக்கும் பணி, இன்னமும் சில மாதங்களில் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியைத் தேடி கட்சியினர் திசை மாறிப் போகிறார்கள் என்றாலும், அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு தினகரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.