News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை இன்று அவரது கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வினரும் விஜய் ரசிகர்களும், ‘கொள்ளைத் தலைவன்’, ‘கலவித் தலைவன்’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

சீமானின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள், ‘’சீமான் என்கிற ஒற்றைப் பெயருக்குத் தான் 36 லட்சம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதுவே, உண்மையான அரசியல் புரட்சி. இந்த நூற்றாண்டின் ஒப்பற்றப் புரட்சியாளன் அண்ணன் சீமான். திமுக குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட கருணாநிதி என்று பெயர் வைப்பது இல்லை. ஆனால் தமிழர் இல்லத்தில் பிரபாகரன்களும்,திலீபன்களும், மதிவதனிகளும், பாலச்சந்திரன்களும்,துவாரகாக்களும் பிறந்துக் கொண்டே இருக்கிறார்கள்.ஈழம் என்பது எங்கோ இருக்கும் தீவு என்பது போல பேசிக் கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில் ஈழம் தமிழர்களின் மற்றொரு தாய் நாடு என நிறுவியதில் முதன்மை பேராற்றல் அண்ணன் சீமான் மட்டுமே. சாதியும் மதம் அல்ல தமிழ் இனமும் மொழியும் தான் எங்கள் அடையாளம் என சாதித்தவர். தமிழ் இனத்து மன்னனால் அடையாளம் காட்டப்பட்டு எங்கள் அண்ணனாய் மாறிப்போன அற்புதன்…’’ என்றெல்லாம் புகழ்ந்து, ‘எங்கள் கொள்கைத் தலைவன் சீமான்’ என்ற ஹேஸ்டேக்கை டிரண்டிங் செய்கிறார்கள்.

அதேநேரம், தி.மு.க.வினரும் விஜய் கட்சியினரும் இதுவரை சீமான் பேசிய பொய்கள், விஜயலட்சுமி விவகாரம் மற்றும் கருத்து மாற்றம் ஆகியவற்றை எடுத்துப் போட்டு, ‘கொள்ளைத் தலைவன் சீமான்’, ‘கலவித்தலைவன் சீமான்’ ஆகிய ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகிறார்கள். விஜய் பிறந்த நாள் பரிசு போன்று வாழ்த்து கூறினாலும் அவரது கட்சியினர் சீமானை ஏற்றுக்கொள்ளாதது தான் ஆச்சர்யம்.

அதேநேரம், பிறந்த நாள் அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக சீமான் மீது கரூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் நீதிமன்றத்தில் தமிழ் ராஜேந்திஅன் என்பவர் தொடர்ந்த வழக்கையடுத்து, புதிய தான்தோன்றிமலை போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்படியோ அண்ணனின் பிறந்த நாள் சமூகவலைதளங்களில் களை கட்டுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link