Share via:
சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இர்பானை மன்னிக்கவே முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல யூடியூபர் தன்னோட மனைவி ஆலியாவை கடந்த ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதித்தார். அதன்படி ஜூலை 24ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருந்த இர்பான் அங்கு நடக்கும் சிகிச்சையை தன்னுடன் அழைத்து சென்ற வீடியோகிராபரை வைத்து வீடியோவாக பதிவு செய்தார்.
அதோடு மட்டுமல்லாமல், குழந்தையின் தொப்புள் கொடியை மருத்துவர்கள் அளித்த கத்திரிக்கோலால் வெட்டினார். இந்த வீடியோ 3 மாதங்கள் கழித்து வெளியான நிலையில், பெரும் பரபரப்பை கிளப்பியது.
இது குறித்து மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசும்போது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியிருக்கிறார். அவர் மீதும் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த மருத்துவர் நிவேதிகா உள்ளிட்டோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இர்பான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த அரசியல் பின்புலமும் டையாது. இந்த முறை அவர் மன்னிப்புக் கேட்டாலும் அவரை விடமாட்டோம். அவர் மீது சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.