Share via:
தீபாவளி பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு தீபம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, தீபாவளி முதல் ஆண்டுதோறும் 3 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச்செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தீபம் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஆண்டுதோறும் ரூ.2,684 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட உள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டருக்கு ஆகும் செலவை இனி சேமித்து வைக்கலாம் என்ற நிலையும், வேறு முக்கிய செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.