News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் பிரிப்பதற்கான வேலையில் பிரதமர் மோடியும் தேர்தல் கமிஷனும் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் அடிப்படையில், இனி இந்திய பிரதமராக யார் வருவது என்பதை தென்னிந்தியர்கள் தீர்மானிக்க முடியாது என்பது தான் மிகப்பெரும் அபாயம்.

இந்திரா காந்தி காலத்தில் மக்கள் தொகையை குறைப்பதற்காக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் நாடெங்கும் தீவிரம் காட்டப்பட்டது. அப்போது தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தின. ஆனால், வட நாட்டினர் இந்த திட்டத்தைக் கொஞ்சமும் மதிக்கவே இல்லை. ஆகவே, இப்போது வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகவும் தென்னிந்தியாவில் மிகவும் குறைவாகவும் மக்கள் உள்ளனர்.

இதன் அடிப்படையில் டிலிமிட்டேசன் வரும் பட்சத்தில் இப்போது 39 தொகுதிகளாக இருக்கும் தமிழகத்தின் தொகுதிகள் 31 ஆக குறைந்துவிடும். அதோடு கேரளா, ஆந்திரம், தெலுங்கானாவிலும் ஏழெட்டு தொகுதிகள் குறைகின்றன. கர்நாடகாவிற்கும் இரண்டு சீட் குறைகிறது.

அதேநேரம், 80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்துக்குக் கூடுதலாக 11 சீட்டுகள் கிடைக்கின்றன. 40 தொகுதிகள் கொண்ட பீகாருக்கு கூடுதலாக 10 தொகுதிகள் உருவாகின்றன. மேலும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளுக்கும் கூடுதல் சீட் உருவாகும்.

சீட் அதிகரிக்கும் மாநிலங்கள் எல்லாமே பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருப்பதும் சீட் குறைக்கப்படும் மாநிலங்கள் எல்லாம் எதிர்க் கட்சிகள் என்பதைக் காணும்போது, நிரந்தர பிரதமர் ஆவதற்காக இந்த அஸ்திரத்தைக் கண்டிப்பாக மோடி கையில் எடுத்து நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே தெரிகிறது.

இதனை ஏற்கெனவே உதயநிதி பேசி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியிருக்கிறார். இனி, ஒட்டுமொத்த வசூலையும் வட மாநிலங்களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுப்பார்கள். தென்னிந்தியா முழுமையாக எதிர்த்தாலும் மத்திய அரசுக்கு ஒரு பிரச்னையாகவே இருக்காது.

இதையடுத்து, இனியாவது தென்னிந்தியர்கள் வீட்டுக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள். அது, இதைவிட ஆபத்து.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link