News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அம்பேத்கர், பெரியார், காமராஜர் என்று தொடங்கிய கட் அவுட் இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. சகல கட்சியினரையும் அரவணைக்கும் இந்த பட்டியலில் விடுதலைப்புலிகள் பிரபாகரன் படமும் இடம்பெறப் போவதாக வரும் செய்தி நாம் தமிழர் கட்சியினரை கதிகலங்கச் செய்திருக்கிறது.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கவர் செய்யும் வகையிலே கட் அவுட் வைத்திருக்கிறார் விஜய். திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்காஅ பெரியார் படம் வைத்திருக்கிறார். தேசிய அரசியல் பேசுபவர்களை வளைப்பதற்கு காமராஜர் படமும், தலித் அரசியலுக்கு அம்பேத்கர் படமும் வைத்திருக்கிறார். இந்த கட் அவுட் வைப்பது மட்டுமே அவரது திட்டமாக இருந்தது.

பெண்களுக்கு இடம் வேண்டும் என்று கூறப்பட்டதன் அடிப்படையிலே முக்குலத்தோரை கவர் செய்வதற்காக வேலு நாச்சியாரும் வன்னியர்களை கவர் செய்வதற்கு அஞ்சலை அம்மாள் கட் அவுட்டும் வைக்கப்பட்டன. இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருதுபாண்டியர், பூலித்தேவர் ஆகியோர் படங்கள் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன. இதனை முடிவு கட்டும் வகையில் சேரர், சோழர், பாண்டியர் கட் அவுட் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளை இழுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் பிரபாகரன் படம் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேப்டன் விஜயகாந்த் மீது இருக்கும் அன்பைக் காட்டும் வகையில் அவரது படமும் வைக்கலாம் என்றும் கேட்கிறார்கள்.

இத்தனை படங்கள் வைத்து பொருட்காட்சி ஆக்கிட்டாரே விஜய் என்றும் புலம்பல் கேட்கிறது. அதேபோல், பேசாமல் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு கட் அவுட் வைச்சிடுங்க என்றும் சொல்கிறார்கள்.

மாநாடு காமெடியாப் போச்சு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link