Share via:
நாளை விஜய் மாநாடு நடக்கும் நிலையில் இன்று சமூகவலைதளம் முழுக்க
ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான ஹேஸ்டேக் போராட்டம்
நடக்கிறது. சூப்பரான மோதல் என்று அத்தனை கட்சியினரும் ஆனந்தமாக சண்டையை வேடிக்கை பார்க்கிறார்கள்.
ரஜினியின் மேனரிசத்தை அப்படியே காப்பியடித்து விஜய் அரசியலுக்கு
வருகிறார் அதனால் அவர் ஜெராக்ஸ் காபி விஜய் என்று ரஜினி ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து
வைத்தார்கள். இதையடுத்து விஜய் நடித்த படங்களின் பிட் சீன்களை எல்லாம் பொறுக்கியெடுத்து
நடிச்சது பிட்டு மாநாடு ஷிட்டு என்ற ஹேஸ்டேக்க கடந்த இரண்டு நாட்களாக டிரெண்டிங்காக
வைத்திருக்கிறார்கள்.
இனியும் அமைதியாக இருந்தால் நல்லாயிருக்காது என்று விஜய் ரசிகர்கள்
இன்று களத்தில் இறங்கி, ‘ஓடிப்போன நாயி… உனக்கெதுக்கு வாயி’ என்ற ரஜினி அரசியலுக்கு
வராமல் ஏமாற்றியதை எடுத்துப் போட்டு கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். இவர்களுடைய
சண்டையில் ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பேருடைய மண்டையும் உடைபடுகிறது.
ரஜினியின் வழுக்கை படத்தை இவர்கள் எடுத்துப் போட, விஜய்யின் வழுக்கை
படத்தையும் தொப்பையையும் ரஜினி ரசிகர்கள் எடுத்துப் போடுகிறார்கள். சூப்பர்ஸ்டாரை தோற்கடிக்க
மூன்று தலைமுறைகளாக கமல்ஹாசன், விஜய்காந்த் மோதிப்பார்த்து மண்டை உடைந்துபோனார்கள்.
நீ அவருக்கு கால் தூசு என்று விமர்சனம் வைக்கிறார்கள். அதோடு தலைவா படத்துக்கு ஜெயலலிதா காட்டிய எதிர்ப்புக்கு
பயந்து வெளியிட்ட வீடியோவையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள், ‘என்ன பெருசு வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா…
எம்.ஜி.ஆரிடம் பெல்ட் அடி வாங்கியது மறந்துபோச்சா’ என்றெல்லாம் எடுத்துப் போட்டு கட்
அவுட் வைக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் தி.மு.க. ஐ.டி. விங்
ஆட்களே இப்படி விஜய்யை கிண்டல் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. வாயைத் திறந்து ரஜினியும்
விஜய்யும் பேசினால் நல்லது.