Share via:
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விடுமுறை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் தேர்வு எழுதிவிட்டு வரும் விடுமுறைக்காக காத்திருக்கும் மாணவர்கள் விடுமுறை நீட்டிக்கப்படதா என்று ஏங்குவதும் உண்டு.
தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வுகள் முடிவுக்கு வரும் நிலையில், செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் விடுமுறை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 5 நாட்களில் சனி, ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி வந்துவிடுவதால் விடுமுறை என்பது 2 நாட்களே என்றும், தேர்வுத்தாள்களை திருத்துவதற்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்குமான கால அவகாசம் குறைவாக இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், விடுமுறையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் விடுமுறை திறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளதால் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.